விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2025–26 கல்வியாண்டிற்கான முதுகலைப் படிப்புகளுக்கான (எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம்.) பொது கலந்தாய்வு இன்று (13ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
சேர்க்கைக்காக பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் விண்ணப்பப் பிரதியுடன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளங்கலைப் பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், விண்ணப்பதாரர் மற்றும் பெற்றோர் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், வங்கி கணக்கு விவரம், ஆதார் அட்டை நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.