விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நேற்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் மற்றும் சாமி தரிசனம் செய்தார்கள்.வழக்கம்போல் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் சேவை நேற்று நிறுத்தப்பட்டது.













