சென்னை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 16 முதல் மொத்தம் 20,378 சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பண்டிகை நாட்களில் மக்கள் தங்களின் ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்கள், பயண உதவி அல்லது சந்தேகங்களுக்கு, பயணிகள் எந்த நேரமும் 94459 14436 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஆம்னி (தனியார்) பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து புகார் அளிக்க 1800 425 6151 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
அதேபோல், பயணிகள் தங்கள் புகார்களை கீழ்க்கண்ட எண்களிலும் தெரிவிக்கலாம்:
044-24749002, 044-2628 , 044-26281611
போக்குவரத்து துறை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தீபாவளி சிறப்பு சேவைகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
— போக்குவரத்து துறை