2025-ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிக நிலையங்கள், தங்குமிட வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
24 தற்காலிக நிறுத்துமிடங்கள்:
மொத்தம் 24 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்
11 முக்கிய (Main) நிலையங்கள்
13 மாற்று (Spare) நிலையங்கள்
பேருந்து நிறுத்த வசதி:
மொத்தம் 2,325 பேருந்துகள் நிறுத்தம் செய்யும் வசதி
Corporation பகுதியில் 109 இடங்கள்
- Free – 87
- Paid – 22
Rural பகுதியில் 21 இடங்கள்
- Free – 17
- Paid – 4
கார் நிறுத்தம்:
சுமார் 19,815 கார்கள் நிறுத்தும் வசதி
130 தனி கார் நிறுத்துமிடங்கள் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்:
அனைத்து இலவச தற்காலிக பேருந்து/கார் நிறுத்துமிடங்களிலும் பின்வரும் வசதிகள் வழங்கப்படும்:
- குடிநீர் வசதி
- கழிப்பறைகள்
- போதிய விளக்குகள்
- மேற்புற தாழ்வாண கட்டமைப்பு (மேற்கூரை)
- பொது அறிவிப்பு முறை (PAS)
- காவல் மையம்
- தற்காலிக மின்சாரம் / ஜெனரேட்டர்
- வழிகாட்டு பலகைகள்
- தீ அணைப்பான் வசதி
- அறிவிப்பு பலகைகள்
மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்:
- மழை காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க, நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
- மண், Gravel, Wetmix போன்றவை முன் கையிருப்பில் வைத்தல்
- போதிய வடிகால் வாய்க்கால்கள்
- நீர் தேக்கத்தைத் தவிர்க்க அவசர பராமரிப்பு குழுக்கள் தயார் நிலை
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி திருவிழாவைக் காண அனைத்து வசதிகளும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

