திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025, திங்கட்கிழமை)அன்று தொடங்க இருக்கிறது.
காலை, கொடியேற்றத்தால் விழா ஆரம்பமாக இருக்கிறது.
மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வர இருக்கின்றனர்.
இரவு, பக்தர்களின் உற்சாகத்தை கூட்டும் விதமாக வெள்ளி நந்தி, சிம்ம வாகனம், மயில் மற்றும் மூஷிக வாகனங்களில் சிறப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

