விழுப்புரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு சிறப்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 06105) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற மே 2 முதல் ஜூன் 30 வரை இயக்கப்படும். இது திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 4.15 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். அதே நாளில் காலை 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 06106)அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற மே 2 முதல் ஜூன் 30 வரை இயக்கப்படும். இது திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்குப் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டும். அதே நாளில் இரவு 11.35 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
பெட்டி அமைப்பு: 1- ஏசி மூன்று அடுக்கு பெட்டி, 13- நாற்காலி கார் பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 25.04.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்குத் தொடங்கும்.