விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறையை சேர்ந்த வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது.
- இடம்: திண்டிவனம், புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- நேரம்: காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
இதில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர் மற்றும் தொழிற்கல்வி போன்ற துறைகளில் கல்வித் தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
முன்பதிவிற்கு: www.tnprivatejobs.tn.gov.in
தொடர்புக்கு: 04146-226417, 94990 55906