விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வரும் 19ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளன. 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ. போன்ற கல்வித் தகுதிகள் உடைய இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்கள் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, சுய விபரக் குறிப்புகளுடன் பங்கேற்று வேலை வாய்ப்புகளை பெறலாம்.